சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு சொந்த கட்டடம் : அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

Feb 11, 2019 03:25 PM 99

சீர்காழியில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு தேவையான இடம் தேர்வு செய்து சொந்த கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது சட்டமன்ற உறுப்பினர் பாரதி கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர், முதலமைச்சரின் அனுமதி பெற்று இந்த ஆண்டு ஒதுக்கப்படும் நிதியில் கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். 

Comment

Successfully posted