சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென எரிந்து சேதம்

Jun 30, 2019 07:26 AM 176


சென்னை மதுரவாயல் - தாம்பரம் 200 அடி சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்து முழுதும் சேதமடைந்தது.


சென்னை, திருவான்மியூரைச் சேர்ந்த சேகர் என்பவர் தனது நண்பருடன் காரில், வெளியூர் சென்று கொண்டிருந்தார். மதுரவாயல் பைபாஸ் சாலை, போரூர் டோல்கேட் அருகே கார் சென்றபோது எதிர்பாராத விதமாக கார் தீப்பற்றி எரியத் தொடங்கியது. காரை நிறுத்திவிட்டு உடனடியாக இறங்கிய சேகர் மற்றும் அவரது நண்பர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். ஆனாலும், கார் முற்றிலும் சேதமடைந்தது. காரில் பயணித்த சேகர் மற்றும் அவரது நண்பர் எந்தவித காயங்களும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comment

Successfully posted