கோழிக்கோடு விமான விபத்துக்கு காரணம் விமான ஓட்டிகளின் தவறான கணிப்பே!!

Aug 08, 2020 09:48 PM 785

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம், கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் நேற்று இரவு தரையிறங்கிய போது, கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. தரையில் மோதிய வேகத்தில் விமானம் இரண்டாக உடைந்ததால், இரண்டு விமானிகள் உட்பட 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டு ஆய்வுக்காக டெல்லிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கோழிக்கோடு விமான நிலையத்தின் விமான ஓடுதளம் பாதுகாப்பான தரையிறக்கத்திற்கு தயாராக இருந்ததாகவும், விமான ஓட்டிகளின் தவறான கணிப்பு காரணமாகவே விமானம் விபத்துக்குள்ளானதாகவும் பயணிகள் விமான போக்குவரத்துறை இயக்குநர் அருண்குமார் தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted