கொரொனோ வைரஸ் அழிக்க சீன மருத்துவர்கள் தீவிரம்

Jan 24, 2020 08:06 PM 1204

உலகை அச்சுறுத்தும் கொரொனோ வைரஸ் பாம்புகளிலிருந்து மனிதனுக்கு பரவியது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்நிலையில் இந்த வைரசை அழிக்கும் மருந்து தயாரிப்பதில் சீன மருத்துவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 சீனாவில் வுகான் நகரில் ஆயிரக்கணக்கானோர் கொரொனோ வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள இந்த நோயால் வுகான் நகரம் முற்றுலும் மூடப்பட்டுள்ளது. 13 நகரங்களில் பொதுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருப்பதால் சுமார் 5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வகை வைரஸ்கள் வரிசையில் இதுவரை 6 வகை வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த 6 வகை வைரஸ் மூலம் பரவும் நோய்களைக் குணப்படுத்துவதற்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. ஆனால் தற்போது சீனாவில் பரவி இருப்பது கொரோனாவின் புதிய வகை வைரசாகும். இந்த வைரஸ் சற்று ஆக்ரோஷத்துடன் உள்ளதால் இதை எதிர்கொள்ள முடியாமல்  வுகான் நகர மக்கள் தவித்து வருகின்றனர்

இந்த வைரஸ் எந்த விலங்கிடம் இருந்து எப்படி எந்த வகையில் உருவானது என்பதை தெரிந்து கொண்டால்தான் அதற்கு ஏற்ப தடுப்பு மருந்து தயாரிக்க முடியும் என்பதால் அதற்கான ஆராய்ச்சியில் சீனா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. வுகான் நகரின் இறைச்சி விற்பனை சந்தையில் இருந்தே கொரோனா வைரஸ் பரவியது உறுதிபடுத்தப்பட்டதால் அந்த சந்தையில் இருந்த இறைச்சிகள், உயிருடன் இருந்த விலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வு நடத்தப்படுகின்றன.

இந்த நிலையில் தான் சீனர்களின் உணவுப் பழக்கமே அவர்களுக்கு ஆபத்தாக அமைந்தது தற்போது தெரிய வந்துள்ளது. சீனர்கள் பாம்புகளை உணவாக சாப்பிடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர். உயிருள்ள பாம்புகளை வாங்கிச் சென்று அதனை சூப் வைத்து குடிக்கும் வழக்கம் சீனர்கள் மத்தியில் அதிகமாக காணப்படுகிறது.

கொரோனோ வைரஸ் தாக்கிய பாம்புகளை இவ்வாறு சமைத்து சாப்பிட்ட போது அந்த வைரஸ் மனிதர்களை தாக்கியது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வைரசால் பாதிக்கப்பட்ட சீன கட்டு விரியன் பாம்புகளால் இந்த நோய் மனிதர்களுக்கு பரப்பப்பட்டுள்ளது. பாம்புகளில் இந்த புதுவகை வைரஸ் எவ்வாறு உருவானது என ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. அதைக் கண்டுபிடித்தால் எளிதாக வைரஸ் பரவலை தடுக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Comment

Successfully posted