பஞ்சாபில் கள்ளச்சாராயம் அருந்தியதால் பலியானோர் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது.

Aug 02, 2020 08:47 AM 523

அமிர்தசரஸ், படாலா, டர்ன் டரன் ஆகிய மூன்று மாவட்டங்களில் கள்ளச்சாரயம் குடித்தவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக 3 மாவட்டங்களிலும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்திய காவல்துறையினர், ஏராளமான பேரல்கள் மற்றும் கேன்களில் இருந்த கள்ளச்சாரயம் பறிமுதல் செய்யப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக 7 பேரை கைது செய்துள்ள காவல்துறையினர், கலால் மற்றும் காவதுறையைச் சேர்ந்த 13 பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லடசம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.

Comment

Successfully posted