மதுரை வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிப்பது குறித்து 2 நாட்களில் முடிவு

Mar 15, 2019 06:06 PM 84

மதுரை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியரும்  தேர்தல் அதிகாரியுமான நடராஜன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் முதல்முறையாக தகவல் தொழில் நுட்பம் சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிப்பது குறித்து இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார். 

Comment

Successfully posted