"தளபதி 63" கதைக்கு உரிமை கோரி குறும்பட இயக்குனர் வழக்கு

Apr 19, 2019 06:38 PM 339

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் "தளபதி 63" படத்தின் கதை தன்னுடையது என குறும்பட இயக்குனர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இயக்குனர் அட்லீ இயக்கத்தில், நடிகர் விஜய் நடிக்கும் "தளபதி 63" படத்தில் நடிகர் விஜய், பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடிக்கிறார். இந்த நிலையில் இப்படத்தின் கதை தன்னுடையது என்று செல்வா என்ற குறும்பட இயக்குனர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தளபதி 63 படத்தின் கதைக்கு உரிமை கோரியுள்ள அவர், படப்பிடிப்புக்கு தடை விதிக்க கோரியும், அட்லீ, ஏ.ஜி.எஸ் படத்தயாரிப்பு நிறுவனம் மற்றும் தென்னிந்திய எழுத்தாளர் சங்கம் ஆகியோரை எதிர்மனுதாராக சேர்த்தும் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு வரும் 23 ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

Comment

Successfully posted