கீழடி அருங்காட்சியகம் தமிழரின் பெருமைகளை பறைசாற்றும்- அமைச்சர் பாண்டியராஜன்

May 19, 2019 06:40 AM 273

கீழடி உள்ளிட்ட அருங்காட்சியகங்கள் தமிழரின் பெருமைகளை பறைசாற்றும் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் கலைமாமணி ஏர்வாடி ராதாகிருஷ்ணன் எழுதிய முகத்தில் முகம் பார்க்கலாம், வாழ்க்கை வாழத்தான் ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் பாண்டியராஜன், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நூல்களை வெளியிட்ட பின் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், கீழடி, ஆதிச்சநல்லூர், கொற்கை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு வரும் அருங்காட்சியகங்கள் தமிழரின் பெருமைகளை பறைசாற்றும் என்றார்.

Comment

Successfully posted