இடைத்தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்

Apr 22, 2019 06:46 PM 236

திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பொறுப்பாளர்களை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நியமனம் செய்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு கோவை புறநகர் உள்ளிட்ட 13 மாவட்ட நிர்வாகிகளும்,

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு சேலம் மாநகர் உள்ளிட்ட 14 மாவட்ட நிர்வாகிகளும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல் மதுரை மாநகர் உள்ளிட்ட 17 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கும்

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு தூத்துக்குடி வடக்கு உள்ளிட்ட 11 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted