ஒரே நேரத்தில் துதிக்கையை தூக்கி பிளிறியபடி வழிபாடு செய்த யானைகள்

Aug 13, 2019 12:58 PM 284


பொள்ளாச்சியில் உள்ள யானைகள் முகாமில் உலக யானைகள் தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

யானைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12ம் தேதி உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கோழிகமுதி யானைகள் முகாமில் யானைகள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த முகாமில் மதுக்கரையில் பிடிபட்ட சின்னத்தம்பி யானை உட்பட 26 யானைகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளதையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து முகாமில் உள்ள யானைகளுக்கு கரும்பு, தேங்காய் உட்பட சத்தான உணவுகள் வழங்கப்பட்டது. சிறப்பு பூஜையின் போது, யானைகள் ஒரே நேரத்தில் துதிக்கையை தூக்கி பிளறியபடி வழிபாடு செய்தது பிரமிக்க வைத்தது. இதில், வனத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Comment

Successfully posted