சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் நடிக்கும் பிரபல ஹீரோ

Dec 04, 2019 08:33 PM 1008

ஹீரோ படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் நடிகர் வினய் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹீரோ படத்தைத் தயாரித்த கே.ஜி.ஆர் பிலிம்ஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது. கோலமாவு கோகிலா படத்தின் இயக்குநர் நெல்சன் இயக்கும் இந்தப் படத்துக்கு ‘டாக்டர்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் நடிகை பிரியங்கா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிகர் வினய் நடிக்கவுள்ளதாகவும், மேலும் யோகி பாபுவும் இந்த படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Comment

Successfully posted