தென்கொரியாவில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ்

Feb 24, 2020 08:34 AM 516

சீனாவை தொடர்ந்து தென்கொரியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் அங்கு 161 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவின் வூகான், ஹூபே நகரங்களில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசால் இரண்டாயிரத்து 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 77 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், சீனாவை தொடர்ந்து உலக நாடுகளிலும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தென்கொரியாவில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை அங்கு 7 பேர் பலியாகி உள்ள நிலையில், 763 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 161 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

Comment

Successfully posted