உன்னாவில் தீ வைத்து எரிக்கப்பட்ட இளம் பெண்ணின் தந்தை ஆதங்கம்

Dec 08, 2019 08:39 AM 226

உன்னாவில், தீ வைத்து எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழந்த நிலையில், குற்றவாளிகளை என்கவுண்ட்டர் நடத்தி சுட்டுக்கொல்ல வேண்டும் என அந்த பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார். உன்னாவில், தீ வைத்து எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழந்த நிலையில், குற்றவாளிகளை என்கவுண்ட்டர் நடத்தி சுட்டுக்கொல்ல வேண்டும் என அந்த பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த 23 வயது பெண் ஒருவர், இரண்டு பேர் தன்னை கடத்திச்சென்று பலாத்காரம் செய்து விட்டதாக அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் சென்ற பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை, 5 பேர் வழிமறித்து, ஈவிரக்கம் இல்லாமல் தீ வைத்தனர். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைகளில் முதலுதவி அளித்தனர். அந்த பெண் அளித்த வாக்குமூலத்தின் பேரில், அவர்கள் 5 பேரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர். அதே சமயம், சிகிச்சை பலன் இல்லாமல், அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அந்தப் பெண்ணின் தந்தை, தனக்கு பணமோ, வேறு உதவிகளோ தேவை இல்லை என்றும், ஐதராபாத்தில் என்கவுண்ட்டர் நடத்தி கொன்றதுபோல, இந்த வழக்கிலும் குற்றவாளிகளை என்கவுண்ட்டர் நடத்தி கொல்ல வேண்டும் அல்லது தூக்கில் போட வேண்டும் என்று மகளை இழந்த சோகத்தில் ஆவேசமாக கூறினார்.

Comment

Successfully posted