மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய அரசு எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை : தம்பிதுரை

Jan 02, 2019 06:17 PM 477

மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக அரசின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுப்பதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை விமர்சித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகேதாட்டு விவகாரத்தில் ஜனநாயக ரீதியில் போராடி வருவதாகவும், ஆனால் மத்திய அரசு எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினார். பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேகேதாட்டு விவகாரத்தை திசை திருப்பவே ரபேல் விவகாரத்தை ராகுல் காந்தி எழுப்பியதாக தம்பிதுரை குற்றச்சாட்டினார். மேகேதாட்டுவுக்கு வழங்கிய அனுமதியை திரும்ப பெற மத்திய அரசு தயாராக இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

Comment

Successfully posted