காஷ்மீரில் 3வது நாளாக பாதுகாப்புப்படை, தீவிரவாதிகள் இடையே சண்டை

Mar 03, 2019 04:47 PM 291

காஷ்மீரில் 3 நாட்களாக நடைபெற்ற கடும் துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

காஷ்மீரின் பாபாகண்ட் நகரில், ஹந்த்வாரா பகுதியில், தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதாக, பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, அங்கு சென்ற பாதுகாப்புப் படை வீரர்கள் மீது, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, இந்திய வீரர்கள், தீவிரவாதிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் 3 பேரும், ஜம்மு மற்றும் காஷ்மீரின் 2 போலீஸ் அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடந்து வருகிறது. தற்போது, 3வது நாளாக தீவிரவாதிகளுடன் சண்டை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted