செப்டம்பர் 15ம் தேதிக்கு பிறகு இறுதி பருவத்தேர்வு நடக்கும்!

Sep 02, 2020 09:24 AM 764

தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் இறுதி பருவத்தேர்வு செப்டம்பர் 15ம் தேதிக்கு பிறகு நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளின் இறுதி பருவத்தேர்வு செப்டம்பர் 15ம் தேதிக்கு பிறகு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான அட்டவணை மற்றும் தேர்வு மையங்கள் குறித்து விரைவில் தகவல் வெளியிடப்படும் என்றும், மாணவர்கள் நேரில் தேர்வு எழுதும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் தேர்விற்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டட அமைப்பியல் இளநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களை செப்டம்பர் 7ம் தேதி முதல் மாணவர்கள், இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comment

Successfully posted