சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர், இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறலாம் -அதிமுக தலைமை அறிவிப்பு!

Feb 24, 2021 08:45 AM 2952

சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அஇஅதிமுக சார்பாக போட்டியிட விரும்புவோர், இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறலாம் என்று தலைமை கழகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரள சட்டப்பேரவை பொதுத்தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளது. இதில்  அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள், இன்று முதல் மார்ச் ஐந்தாம் தேதி வரை, விருப்ப மனு விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்ளலாம் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.


 தமிழ்நாடு மாநில விண்ணப்ப படிவங்களுக்கான கட்டணமாக 15 ஆயிரம் ரூபாயும், புதுச்சேரி மாநில விண்ணப்ப படிவங்களுக்கு 5 ஆயிரம் ரூபாயும், கேரள மாநில விண்ணப்ப படிவங்களுக்கு 2 ஆயிரம் ரூபாயும் செலுத்தி விருப்ப மனுக்களை பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாள்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, தலைமை கழகத்தில் விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.  விருப்ப மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாக பூர்த்தி செய்து மீண்டும் தலைமை கழகத்தில் வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

 எப்போதும் புரட்சித் தலைவி ஜெயலலிதா வழியில், தேர்தல் பணிகளை முதலில் தொடங்குவது அஇஅதிமுக என மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

 

Comment

Successfully posted