வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்ட நாகை மீனவர்கள்!

Oct 15, 2018 12:33 PM 627

வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்ட நாகை மீனவர்கள் இன்று மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், அரசால் வழங்க கூடிய மானிய டீசலின் அளவை உயர்த்தி வழங்க வலியுறுத்தியும் நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் கடந்த 10 நாட்களாக தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் மீனவர் சங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவது என்று முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மீனவர்கள் அனைவரும் இன்று கடலுக்குச் சென்றனர். அரசு விரைவில் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comment

Successfully posted