கர்நாடகாவில் கனமழை -கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

Aug 16, 2018 12:05 PM 353

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஒருவார காலமாக கனமழை பெய்து வருகிறது. கேரளாவில் பெய்து வரும் வரலாறு காணாத  கன மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. இதேபோன்று,   கர்நாடகா மாநிலத்திலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருவதால், அங்குள்ள ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக கடலோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  வெள்ள நிவாரண நடவடிக்கை மற்றும்  நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை துரிதப்படுத்துவது குறித்து, அதிகாரிகளுடன் முதலமைச்சர் குமாரசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

Comment

Successfully posted