கொல்கத்தா அணியின் பீல்டிங் பயிற்சியாளராக மாறிய முன்னாள் இங்கிலாந்து வீரர்

Feb 11, 2020 01:11 PM 600

ஐபிஎல் 2020 சீசன் நெருங்கி வரும் நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை பீல்டிங் பயிற்சியாளராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் நியமித்துள்ளது .

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜேம்ஸ் ஃபாஸ்டர். இவர் இங்கிலாந்து அணிக்காக 7 டெஸ்ட், 11 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பீல்டிங் பயிற்சியாளராக நியமித்துள்ளது. இதற்கு முன், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சுபாதீப் கோஷ், கே.கே.ஆர் அணியின் பயிற்சியாளராக இருந்தார். இந்நிலையில், தற்போது பாஸ்டர் நியமிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்தைச் சேர்ந்த பிரெண்டன் மெக்கல்லம், தலைமை பயிற்சியாளராகவும், கைல் மில்ஸ் பந்து வீச்சு பயிற்சியாளராகவும் உள்ளனர்.

Comment

Successfully posted