கர்நாடகாவில் வாகன ஒட்டுநரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்

Feb 26, 2020 11:28 AM 118

கர்நாடகாவின் அத்திப்பள்ளி சுங்கச்சாவடியில் வாகன ஒட்டுநரை சுங்கச்சாவடி ஊழியர்களுடன் சேர்ந்து ரவுடிகள் சிலர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக - தமிழக மாநிலங்களின் எல்லையான அத்திப்பள்ளி சுங்கச்சாவடியில் பாஸ்டாக் சரிவர செயல்பட வில்லையென கூறி பணம் செலுத்துமாறு சுங்கச்சாவடி பெண் ஊழியர் கேட்டுள்ளார்.

இதனால் கர்நாடகத்தை சேர்ந்த வாகன ஒட்டுநர் ஜெகதீஷ் என்பவருக்கும் சுங்கச்சாவடி பெண் ஊழியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பெண் ஊழியர் ஜெகதீஷை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.

மேலும், சுங்கச்சாவடி ஊழியருக்கு ஆதரவாக 5 ரவுடிகள் சேர்ந்து தன்னை தாக்கியதாக அத்திப்பள்ளி காவல்நிலையத்தில் ஓட்டுநர் ஜெகதீஷ் புகார் அளித்தார். இதையடுத்து, சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Comment

Successfully posted