சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபர் கைது

May 04, 2021 08:19 AM 919

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மாட்டையாம்பட்டியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளியான தனபால், அதே பகுதியை சேர்ந்த சிறுமியை, நுங்கு வெட்டித் தருவதாக கூறி காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

காட்டில் வைத்து சிறுமியை, பாலியல் வன்கொடுமை செய்த தனபால், கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றார்.

பின்னர் கல்லை தூக்கிப்போட்டு சிறுமியை துடிதுடிக்க கொலை செய்துள்ளார்.

தலைமறைவாக இருந்த தனபாலை காவல்துறையினர் கைது செய்தனர்.

கஞ்சா போதையில் சிறுமியை கொலை செய்ததும், அந்த பகுதியில் பல பெண்களுக்கு அவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் தனபாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Comment

Successfully posted