ஆன்லைன் விளையாட்டின் மூலம் பணக்காரராக மாறிய பெண்

Dec 05, 2019 08:45 PM 401

ஏழை பெண் ஒருவர் ஆன்லைன் விளையாட்டின் மூலம் பணக்காரராக மாறியுள்ளார்.

பிரிட்டன் அருகே இருக்குற சீஹாம் நகரில் வசித்து வரும் 51 வயதுடைய அனிதா பேம்ப்பெல் என்ற பெண், பிங்கோ விளையாட்டின் மூலம் 11 லட்சத்து 19 ஆயிரம் டாலர் பரிசுத் தொகையாக பெற்றுள்ளார்.4 குழந்தைகளுக்கு தாயாகிய அனிதா உடல்நலம் குன்றியோருக்கான உதவி தொகையினை பெற்று அதன் மூலம் தனது குடும்பத்தை வழிநடத்தி வந்தார்.மிகவும் ஏழ்மையில் இவரின் குடும்பம் தத்தளித்து வந்த நிலையில், செல்போனில் இலவச ஆன்லைன் விளையாட்டு விளையாடி வந்தார். பொழுதுபோக்குக்காக தொடர்ந்த ஆன்லைன் விளையாட்டானது, அனிதாவிற்கு அதிர்ஷ்டத்தைக் கொடுத்துள்ளது.

, பிங்கோ என்ற ஆன்லைன் விளையாட்டை விளையாட தொடங்கிய அனிதா, பிங்கோ விளையாட்டை விளையாடிய முதல் தருணத்திலேயே 5 லட்சத்து 97 ஆயிரம் டாலர்கள் பரிசு பெற்றார், இந்த பரிசு தொகையின் உத்வேகத்தில் தொடர்ந்து பிங்கோ விளையாட்டினை விளையாடி வந்தார் அனிதா. இரண்டாவது முறையாகவும் அதிர்ஷ்டம் அவரை தேடி வந்தது. அதே பிங்கோ விளையாட்டை விளையாடி இரண்டாவது முறையும் 5 லட்சத்து 52 ஆயிரம் டாலர் பரிசு பெற்றார் அனிதா.

இந்திய ரூபாயில் இவர் பெற்ற பரிசு தொகையின் மொத்த மதிப்பு 8 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பரிசு தொகை குறித்து அனிதா கூறுகையில் , முதலில் நான் பரிசு பெறுவேன் என்று எனக்கே நம்பிக்கை இல்லை, எல்லாம் கடவுளின் மகிமைதான் , நான் இந்த பரிசு தொகையின் ஒரு பாதியை எனது பெற்றோரின் நீண்ட நாள் கனவான வீடு கட்டும் பணிக்கு கொடுத்து, மீதமுள்ள தொகையை எனது குழந்தைகளின் வாழ்க்கைக்காக செலவிட்டு வருவதாக அனிதா தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted