"அதிமுக ஆட்சி பத்திரிகையாளர்களின் பொற்காலம்" - கடம்பூர் ராஜு

Sep 06, 2021 09:36 PM 1186

10 ஆண்டு கால அதிமுக ஆட்சி, பத்திரிகையாளர்களுக்கு பொற்கால ஆட்சி என சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு பெருமிதம் தெரிவித்தார்.

மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, பேசிய அவர், பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம், பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம், இறப்புக்கான குடும்ப நிதி உள்ளிட்டவற்றை, அதிமுக அரசு உயர்த்தி வழங்கியதாகத் தெரிவித்தார்.

பத்திரிக்கையாளர் நலவாரியம் அமைக்க அறிவிப்பு வெளியிட்டு, அதற்கான குழு ஏற்படுத்தப்பட்டதாகக் கூறினார்.

image

சுதந்திர போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகள் போன்றவர்கள் கவுரவிக்கப்பட்டதாகவும், மனுநீதிசோழன், சிவாஜி கணேசன், ராமசாமி படையாட்சி, சிவந்தி ஆதித்தனார் ஆகியோருக்கு நினைவு மண்டபங்கள் அமைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

சினிமா துறையில் மத்திய அரசு விதித்த வரியை குறைத்து வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டதாகவும், திரைப்பட தொழிலாளர்களின் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டதாகவும் கூறினார்.

பையனூரில் ஆயிரம் ஏக்கர் நிலத்தில் 5 கோடி மதிப்பில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பெயரில் படபிடிப்பு தளம் திறந்து வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Comment

Successfully posted