மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாவது மகிழ்ச்சியான செய்தி - தனுஷ்

Dec 30, 2020 11:57 AM 8850

மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்கில் பாருங்கள் என நடிகர் தனுஷ் ட்வீட் செய்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம், ஜனவரி 13ம் தேதி வெளியாக உள்ளது. இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள தனுஷ், மாஸ்டர் படம் திரையரங்கில் வெளியாவது மிகச்சிறந்த செய்தி என்றும், குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் படம் பார்ப்பதன் மூலம் திரையரங்க கலாச்சாரத்தை மீண்டும் உருவாக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

திரையரங்க அனுபவத்தைப் போல எதுவும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Comment

Successfully posted