காவலர்கள் எப்போதும் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் - ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல்

Nov 29, 2018 01:28 PM 249

காவலர்கள் எப்போதும் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை கோட்ட ரயில்வே சார்பில், ஐ.ஜி பொன்.மாணிக்கவேலுக்கு, பிரிவு உபச்சார விழா, பெரம்பூரில் நடைபெற்றது. அப்போது பேசிய ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய காவலர்கள் எப்போதும் பயப்படக்கூடாது என்றும், காவலர்கள் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் எனவும் கூறினார். குற்றங்களை பதிவு செய்யும் போது, 9 எம்.எம் துப்பாக்கியை பயன்படுத்துவதை விட, 90 எம்.எம் அளவுள்ள செல்போனை பயன்படுத்துவதே சிறந்தது எனவும் அவர் தெரிவித்தார். இதனைதொடர்ந்து, பணியில் சிறப்பாக செயல்பட்ட ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளுக்கு, பாரட்டு தெரிவித்து சான்றிதழ்களை அவர் வழங்கினார்.

Comment

Successfully posted