நிர்பயா குற்றவாளிகளின் தண்டனைக்கான புதிய தேதி மனு மீது இன்று விசாரணை

Feb 17, 2020 08:14 AM 155

நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற புதிய தேதியை அறிவிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் அக்சய் தாகூர், பவன் குப்தா, முகேஷ் சிங், வினய் சர்மா ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த ஜனவரி 22ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவிருந்த நிலையில், பின்னர் பிப்ரவரி 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த கீழமை நீதிமன்றம், தூக்கு தண்டனையை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்தது.

இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, 4 பேருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான புதிய தேதியை அறிவிக்க கோரி, திகார் சிறை நிர்வாகம் சார்பில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

Comment

Successfully posted