தாளவாடி மலைப்பகுதியில் பச்சை மிளகாய் விலை அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

Jun 13, 2019 02:08 PM 73

தாளவாடி மலைப்பகுதியில் பச்சை மிளகாய் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக விளங்கி வருகிறது. குறிப்பாக மிளகாய் குறைவான விவசாயிகளால் மட்டுமே பயிரிடப்படுகிறது. சொட்டுநீர் பாசனம் மூலம் சாகுபடி செய்யப்பட்டு வரும் மிளகாய் விலை தற்போது கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ 35 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்பனையாவதால், மிளகாய் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இங்கு விளையும் மிளகாய் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

Comment

Successfully posted