அஸ்வின், கோஹ்லிக்கு இடையே நடந்த மறைமுக சண்டை...

Apr 25, 2019 03:19 PM 870

இந்த ஐபிஎல் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு சவால் நிறைந்ததாகவே உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அவரது கேப்டன் பொறுப்பு பலரும் பாராட்டும் வகையில் இருந்தாலும், ஜாஸ் பட்லரை அஸ்வின் அவுட்டாக்கிய விதம், கிரிக்கெட் உலகில் அவருக்கு எதிராக எதிர்மறை கருத்துக்களை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் அஸ்வினுக்கும், கோஹ்லிக்கும் ஒரு மறைமுக சண்டையே நடந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

கடைசி ஓவரில் பஞ்சாப் அணி வெற்றி பெற 27 ரன்கள் தேவைப்பட்டது. உமேஷ் யாதவின் முதல் பாலை எதிர் கொண்ட அஸ்வின் சிக்ஸ் அடித்தார். அடுத்த பாலையும் சிக்ஸ் அடிக்க முயன்ற அஸ்வின், பவுண்டரியில் கோஹ்லியிடம் கேட்ச் ஆனார். அப்போது கோஹ்லி செய்கையில் "இப்போ சிக்ஸ் அடி பார்ப்போம்" என்று ஆவேசமாக கூறினார்.

இதை பார்த்த அஸ்வின் பெவிலியன் திரும்பிய போது கோபத்துடன் க்ளவுஸை தூக்கி எறிந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Comment

Successfully posted