மேற்குவங்க நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்

Oct 17, 2019 02:39 PM 102

மேற்குவங்க மாநிலம் அசன்சோல் மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள் மூவரை மீட்கும் பணியில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

அசன்சோல் மாவட்டத்தில் குல்தி என்னுமிடத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் கடந்த 13ஆம் தேதி சட்டவிரோதமாக நிலக்கரி வெட்டி எடுக்கச் சென்ற தொழிலாளர்கள் 4 பேரில் 3பேர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இது குறித்துத் தகவல் அறிந்த தீயணைப்புப் படையினர் சுரங்கத்தைத் தோண்டி அவர்களை மீட்க முயன்றனர். அந்த முயற்சிகள் பயனளிக்காமல் போனதால் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் நவீனக் கருவிகளின் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுரங்கத்தில் தொழிலாளர்கள் சிக்கி 4 நாட்கள் ஆகும் நிலையில் அவர்களின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை.

Comment

Successfully posted