நீதிபதியின் குடும்பத்தாரை துப்பாக்கியால் சுட்ட பாதுகாவலர்

Oct 14, 2018 06:56 AM 713

டெல்லி குர்கவானில் கூடுதல் செசன்ஸ் மாஜிஸ்திரேட்டாக இருப்பவர் கிருஷ்ண காந்த் சர்மா. இவரது குடும்பத்துக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாவலராக மஹிபால் சிங் என்பவர் பணியாற்றி வந்தார்.இந்நிலையில், குர்கவானில் உள்ள செக்டர் 49 சாலையில் நீதிபதியின் மனைவி ரிது , மகன் துருவ் ஆகியோர் பொருட்கள் வாங்க வந்தனர்.

அப்போது, பாதுகாவலர் மஹிபால் சிங் உடன் அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாதுகாவலர் மஹிபால் சிங் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் நீதிபதியின் மனைவி ரிது, மகன் துருவ் ஆகியோரை சுட்டார். பின்னர் துருவை தரதரவென இழுத்து வந்து தாங்கள் வந்த காரில் அவர் ஏற்ற முயன்றார். ஆனால் அது முடியாததால் அந்த காரை எடுத்துக்கொண்ட மஹிபால் சிங் ,அங்கிருந்து தப்பினார். இந்த சம்பவங்கள் அனைத்தும் பொது மக்கள் முன்னிலையில் நடந்துள்ளன. மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமராவிலும் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன.

இதனிடையே பாதுகாவலர் மஹிபால் சிங் கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிபதியின் குடும்பத்தார் தொடர்ந்து அவமானப்படுத்தியதால் அவர்களை சுட்டதாக அவர் தெரிவித்துள்ளார். போலீஸ் விசாரணை நடந்து வருகிறது. காயம்பட்ட இருவரும் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Comment

Successfully posted