திருநாவுக்கரசுவை 4 நாட்கள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க நீதிபதி உத்தரவு

Mar 15, 2019 06:09 PM 55

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள திருநாவுக்கரசுவை 4 நாட்கள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க கோவை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இளம் பெண்களை துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருநாவுக்கரசு வீட்டில், நேற்று போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அவரது அறையில் இருந்து பென் டிரைவ் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நிலையில், திருநாவுக்கரசு, கோவை குற்றவியல் நீதிபதி முன், காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, திருநாவுக்கரசுவை 4 நாட்கள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டார். திருநாவுக்கரசுவை, 15 நாட்கள் காவலில் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் கோரியிருந்த நிலையில், நீதிபதி 4 நாட்கள் அனுமதி அளித்துள்ளார்.

Comment

Successfully posted