11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினி வழங்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

Nov 08, 2018 03:10 PM 477

11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினி வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதிபட தெரிவித்துள்ளார்.

இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளி நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதால் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதில் தற்காலிகமாக சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி விரைவில் வழங்கப்படும் என கூறினார்.

6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தனியார் பள்ளிக்கு நிகராக புதிய சீருடைகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Comment

Successfully posted