மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்துமீரான் மரைக்காயர் மறைவு!

Mar 08, 2021 06:58 AM 3857

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்துமீரான் மரைக்காயர் மறைவுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் வசித்து வந்த முத்துமீரான் மரைக்காயர், வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 104.

முத்துமீரான் மரைக்காயர் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில், ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மறைவு செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்ததாக கூறியுள்ள முதலமைச்சர், அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், முகமது முத்துமீரான் மரைக்காயர் மறைவு செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாக கூறியுள்ளார். அவரை இழந்துவாடும் குடும்பத்தாருக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

Comment

Successfully posted