மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் - விசாரணை வரும் 20ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு

Dec 10, 2018 03:58 PM 294

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசு செலவில் நினைவில்லமாக மாற்ற தடை கோரிய வழக்கின் விசாரணை வரும் 20ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் நினைவில்லமாக மாற்றப்படும் என கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதற்கான நில அளவிடும் பணிகளும் தொடங்கியுள்ளது, கருத்து கேட்பு கூட்டமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், டிராபிக் ராமசாமி தொடர்ந்து வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இன்று நடைபெற்ற விசாரணையில், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆஜராக வேண்டியுள்ளதால் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரப்பட்டது. டிராபிக் ராமசாமி தரப்பில் கூடுதல் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இருதரப்பும் கால அவகாசம் கோரியதை தொடர்ந்து வழக்கு விசாரணை வரும் 20ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Comment

Successfully posted