சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் ;கைது பட்டியல் நீளுகிறது

Nov 30, 2020 05:51 PM 1672

சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமி பாலியலில் பலாத்கார வழக்கில், தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய புள்ளிகளும் விரைவில் சிக்குவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. 

சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஷகிதாபானு, தனது கணவரான தண்டையார்பேட்டை மதன்குமாரும் சேர்ந்து, உறவினர் பெண்ணான 15 வயது சிறுமியை, வீட்டு வேலைக்கு அழைத்துச் செல்வதாக கூறி, கட்டாயப்படுத்தி விபசாரத்தில் தள்ளிய வழக்கு விசாரணை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. சிறுமியின் உறவினர்கள், காவல் ஆய்வாளர், அரசியல் பிரமுகர், அரசு உயர் அதிகாரிகள் என சிறுமியை சீரழித்தவர்களின் பட்டியல் நீண்டுக் கொண்டே போகிறது.

சிறுமியை நாளொன்றுக்கு 5 முதல் 8 பேர் வரை பாலியல் வன்கொடுமை செய்ததும், கடந்த சில மாதங்களில் நானூறுக்கும் மேற்பட்டவர்கள் இதில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான விசாரணையில், காவல்துறை தீவிரம் காட்டியுள்ள நிலையில் பல முக்கிய பிரமுகர்கள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபாஜி என்பவரை கைது செய்து, வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comment

Successfully posted