ஆட்டோ ரேசில் ஈடுபட்ட மெக்கானிக் லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலி

Nov 15, 2019 09:23 AM 108

சென்னை போரூர் மேம்பாலத்தில் ஆட்டோ ரேசில் ஈடுபட்ட மெக்கானிக் லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், தாம்பரம் பைபாஸ் சாலையில் ஆட்டோ ரேஸில் ஈடுபட்ட பிரபாகரன் போரூர் மேம்பாலத்தில் வேகமாக சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியில் மோதி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சட்ட விரோதமாக ஆட்டோ ரேஸில் ஈடுபட்டவர்களையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Comment

Successfully posted