முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு தயாரிப்பாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

May 09, 2020 10:04 AM 1708

இயக்குநர் பாரதிராஜா, கலைப்புலி தாணு, டி.ஜி.தியாகராஜன், கே. முரளிதரன், டி.சிவா, கே.இ. ஞானவேல் ராஜா, கமீலா நாசர், பி.எல்.தேனப்பன், விஷ்ணு விஷால், எஸ்.ஆர்.பிரபு, ஃபெஃப்சி சிவா உள்ளிட்ட பல்வேறு தயாரிப்பாளர்கள் சார்பில் எழுதப்பட்டுள்ள இந்த கடிதத்தில், 11ம் தேதி முதல் தயாரிப்புக்கு பிந்தைய பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கியதற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். மேலும், தங்களின் கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றது உள்ளிட்ட, அனைத்து முயற்சிகளையும் செய்த, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கும் தயாரிப்பாளர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted