கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம்

Nov 15, 2018 01:40 PM 429

கஜா புயல் முன்னெச்சரிக்கை குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் மற்றும் கண்காணிப்பு அதிகாரி மணிவாசகம் தலைமையில், அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது புயல் பாதிப்பிலிருந்து பொதுமக்களையும், கால்நடைகளையும் பாதுகாப்பது குறித்தும், பாதிப்புகளை தடுக்கும் விதமாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பொதுமக்கள் அவசர உதவிக்கு கட்டணமில்லா தொலைபேசி எண், 1077, 04366- 226090, 226080 என்ற எண்கள் மூலம் கட்டுப்பாட்டு அறையை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted