முதியவரின் இறுதி சடங்கில் அஞ்சலி செலுத்த வந்த குரங்கு

Apr 20, 2019 07:21 PM 83

கர்நாடகாவில் முதியவர் ஒருவரின் இறுதி சடங்கில் குரங்கு ஒன்று ஆறுதல் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நார்கண்ட் நகரில் முதியவர் ஒருவரின் இறுதிசடங்கில் அவரது உறவினர்கள் அனைவரும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். அப்போது அனைவரது அழுகை சத்தம் கேட்ட குரங்கு ஒன்று அங்கு வந்தது. அந்த குரங்கு அங்கு அழுதுக்கொண்டிருந்த பெண் ஒருவரின் தலை மீது கை வைத்து ஆறுதல் கூறியது. இதனை அங்கு கூடியிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியவுடன் ஹனுமன் ஜெயந்தியை நினைவுகூர்ந்து கருத்திட்டு வருகின்றனர்.

Comment

Successfully posted