குடும்ப தகராறில் பெற்ற தாயே குழந்தையை எரித்து கொலை செய்த கொடூரம்

Dec 29, 2018 03:58 PM 293

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் பெற்ற தாயே குழந்தையை எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த கரையான்சாவடியில் வசித்து வருபவர் சரவணன். இவர் தனது மனைவி மீனாட்சியுடனும், மகன் ஜெயகாந்தனுடனும் வசித்து வருகிறார் . இந்நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மீனாட்சி தனது 6 வயது மகனை தீவைத்து எரித்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். அதன்படி சிறுவன் ஜெயகாந்தை மண் எண்ணெய் ஊற்றி தீவைத்தார் மீனாட்சி.இதில் பரிதாபமாக உயிரிழந்த ஜெயகாந்தை அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் போட்டு மூடி விட்டார். பின்னர் தானும் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார் மீனாட்சி. ஆனால் தற்கொலை செய்ய பயமாக இருந்ததால் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார் அவர் . இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனின் சடலத்தை மீட்டனர். மீனாட்சியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Comment

Successfully posted