பெற்ற குழந்தைகளை கொலை செய்த தாய்!

Oct 16, 2020 08:36 PM 1065

திருவாடானை அருகே குடும்ப தகராறில் இரண்டு குழந்தைகளை பெற்ற தாயே குளத்தில் தள்ளி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே நாச்சியேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுகன்யா. இவருக்கு 3 வயதில் நிஷான்கா என்ற மகளும், ஒரு வயதில் சாய் என்ற ஆண் குழந்தையும் இருந்த நிலையில், சுகன்யாவுக்கும், கணவர் கணேசனுக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இன்று கணவருடன் மீண்டும் பிரச்னை ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த சுகன்யா இரண்டு குழந்தைகளையும் குளத்தில் முழ்க வைத்து கொலை செய்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் குழந்தைகளின் சடலத்தை கைப்பற்றி, தாய் சுகன்யாவை கைது செய்தனர்.

Comment

Successfully posted