ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டியின் மரணம் கொலை வழக்காக மாற்றம்

Mar 15, 2019 06:04 PM 71

ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நடாளுமன்ற உறுப்பினருமான ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டியின் மரணத்தை கொலை வழக்காக மாற்றி சிறப்பு புலனாய்வுத் துறை விசாரிக்க ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினரும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டி கடப்பாவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு திடீரென மரணமடைந்தார்.

இது இயற்கை மரணமாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஒய்.எஸ் விவேகானந்த ரெட்டி இயற்கையாக மரணமடையவில்லை என்றும், அவரது அறையில் ரத்தக் கறை படிந்துள்ளதாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.

இந்தநிலையில், இந்த புகார் குறித்து உடனடியாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ள முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒய்.எஸ் விவேகானந்த ரெட்டியின் மரணம் குறித்து சிறப்பு புலனாய்வு மூலம் விசாரிக்கவும் ஆணையிட்டுள்ளார்.

Comment

Successfully posted