சென்னை மாதவரம் ரெட்டேரி அருகே கிழிந்த நிலையில், 3 மூட்டைகளில் பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள்

Nov 26, 2018 04:58 PM 375

சென்னை மாதவரம் ரெட்டேரி அருகே கிழிந்த நிலையில், 3 மூட்டைகளில் பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சென்னை அடுத்த புழல் கொரட்டூர் ஏரியில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் கிழிந்த நிலையில் கிடப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த மாதவரம் காவல்துறையினர், 3 மூட்டைகளில் கிழிந்த நிலையில் இருந்த பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை கைப்பற்றினர். கிழிந்த ரூபாய் நோட்டுகளை ஏரியில் போட்டுசென்றது யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Comment

Successfully posted