திருச்சி விமான நிலையத்தில் நாளை மின்சார சோலார் பேனல் திட்டத்தின் திறப்பு விழா

Apr 25, 2019 03:33 PM 159

திருச்சி விமான நிலையத்தில், மின்சார சோலார் பேனல் திட்டத்தின் திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்தப்பட்ட திருச்சி விமான நிலையத்தில், விரிவாக்க பணிகளும், பராமரிப்பு பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அதன் அடிப்படையில், 4 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் மின்சார சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டு உள்ளது. விமான நிலைய மின்சார தேவைக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த சோலார் பேனல்கள் மூலம், ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது. இதன் திறப்பு விழா நாளை நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted