தொலைபேசி மூலம் ஆபாசமாக பேசி வந்த நபருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

Jun 08, 2019 12:18 PM 246

நாகர்கோயிலில் பெண் ஒருவரிடம் தொலைபேசி மூலம் ஆபாசமாக பேசி வந்த நபரை, பொதுமக்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தளவாய் தெரு பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரது மனைவியின் செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் ஆபாசமாக பேசியும், ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பியும் வந்ததாக தெரிகிறது. அந்த பெண் பலமுறை எச்சரித்தும் மர்ம நபர் தொடர்ந்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்து தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனிடையே தனது மனைவியின் செல்போனுக்கு வந்த எண்ணில் தொடர்பு கொண்ட சுப்ரமணியம், பெண் குரலில் பேசி தனது வீட்டிற்கு வருமாறு மர்ம நபருக்கு அழைப்பு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை உண்மை என நம்பிய மர்ம நபரும், பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் ஆட்கள் இருப்பதைக் கண்டதும் ஓட்டம் பிடித்த மர்ம நபரை விரட்டி பிடித்த பொதுமக்கள், மின் கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் மர்ம நபர் கோட்டார் பகுதியைச் சேர்ந்த ராம் பிரபு என தெரியவந்துள்ளது.

Comment

Successfully posted