கொரோனாவல் உயிரிழந்த நபரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்த மக்கள்!

Jul 09, 2020 09:25 PM 439

தேனி மாவட்டத்தில், கொரோனா தொற்றால் உயிரிழந்த நபரின் உடலை அடக்க செய்யவிடாமல் பொதுமக்கள் தடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வள்ளிநகரத்தை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, முத்துக்குமாரின் உடலை அடக்கம் செய்வதற்காக தேனி பள்ளிவாசல் பகுதியில் உள்ள மின் மயானத்திற்கு நகராட்சி பணியாளர்கள் எடுத்துச் சென்றனர். இதனையறிந்த அப்பகுதி மக்கள், கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், உடலை அடக்கம் செய்ய முடியாமல் நகராட்சி பணியாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தேனி காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துச் சென்றனர். இதனையடுத்து, முத்துக்குமாரின் உடலை மின்மயானத்தில் நகராட்சி பணியாளர்கள் தகனம் செய்தனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Comment

Successfully posted