பள்ளி மாணவியின் செல்போனுக்கு ஆபாசப் படங்களை அனுப்பிய நபர்!

Nov 20, 2020 11:35 AM 1116

செங்கல்பட்டில், 8-ம் வகுப்பு மாணவியின் செல்போனுக்கு ஆபாசப் படங்களை அனுப்பிய பள்ளி வேன் உதவியாளர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

வெடால் கிராமத்தை சேர்ந்த விவசாயியின் 13வயது மகள், செய்யூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் மெட்ரிக் பள்ளியில் பயின்று வருகிறார். இவரது செல்போனுக்கு ஆபாசப் படங்கள் வந்ததை அடுத்து, காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சிறுமி பயிலும் பள்ளியில் வேன் உதவியாளராக பணிபுரியும் சூசை சத்யராஜ் என்பவர், ஆபாச படங்களை அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், இதேபோன்று பள்ளியில் பயிலும் பல மாணவிகளுக்கு ஆபாசப் படங்களை அனுப்பி, பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் சேட்டிங் செய்ய வேண்டும் எனக் கூறியதாக பொய்யான தகவலை பரப்பியதும் தெரியவந்தது.

Comment

Successfully posted