புதுச்சேரியில் நடைபெற்ற செல்லப் பிராணிகளுக்கான போட்டி

Feb 03, 2019 10:02 PM 262

புதுச்சேரியில் நடைபெற்ற செல்லப் பிராணிகளுக்கான போட்டியில், பல்வேறு வகையைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன. புதுச்சேரியில் உள்ள தனியார் கிளப் சார்பில் ஆண்டுதோறும் செல்லப் பிராணிகளுக்கான போட்டி நடத்தப்படுவது வழக்கம். இப்போட்டி, 5-வது ஆண்டாக தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. ஜூனியர், இண்டர் மீடியட், பிரடின், ஓபன் போன்ற 6 பிரிவுகளில் இப்போட்டி நடைபெற்றது.

இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஜெர்மன் ஷெப்பர்ட், பாக்சர், டாபர்மேன், ராட்வீலர், பொம்மரேனியன், பக், ராஜபாளையம் போன்ற வகைகளைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட செல்லப்பிராணிகள் கலந்துகொண்டன. இந்நிகழ்வில், உடல் கட்டமைப்பு, கீழ்படிதல் போன்றவற்றில் அதிக மதிப்பெண் எடுக்கும் செல்லப்பிராணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Comment

Successfully posted