சசிதரூருக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்ய தொடரப்பட்ட மனு தள்ளுபடி - டெல்லி உயர் நீதிமன்றம்

Oct 10, 2018 02:35 AM 360

சுனந்தா புஷ்கர் மர்மச்சாவில் சசிதரூருக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்ய தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரும் ,காங்கிரஸ் எம்.பி.யுமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், 2014-ம் ஆண்டு, ஜனவரி 17-ம் தேதி டெல்லி நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது மர்மமான முறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கில்,சசிதரூர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.இந்த விவகாரத்தில் அவர் டெல்லி செசன்ஸ் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார்.

இந்த முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி தீபக் ஆனந்த் என்ற வழக்கறிஞர், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதி ஆர்.கே. காபா விசாரித்தார். அப்போது சசிதரூருக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related items

Comment

Successfully posted